000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கொற்றவை |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a தாய்த் தெய்வ வழிபாட்டின் முதன்மை பெண் தெய்வம் கொற்றவை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a வீரத்தின் அடையாளமான தாய்த்தெய்வம் கொற்றவை இச்சிற்பத்தில் நாலிரு புயங்களைக் கொண்டவளாகவும், எண் கைகளில் ஆயுதங்களைத் தாங்கியவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். இடது காலை ஊன்றி, வலது காலை வளைத்து வைஷ்ணவ நிலையில் தாமரைப்பீடத்தின் மீது நின்றுள்ளாள். தேவியின் முகம் சிதைந்துள்ளது. கரண்ட மகுடம் தலைக்கோலமாய் இருக்கலாம். வீரர்களுக்குரிய அரைகாற் சட்டை அணிந்துள்ளாள். இடைக்கட்டின் கடி பந்தம் முன் தொடைகளில் வளைந்துள்ளது. முன்னிரு கரங்களில் நீண்ட வாளையும், கேடயத்தையும் கொண்டுள்ளாள். வலது பின் கை ஒன்று அபய முத்திரை காட்டுகின்றது. மற்ற அணிகள் அறியக்கூட வில்லை. தேவியின் இருபுறமும் அவளது வாகனங்களான சிம்மமும், மானும் மேற்புறத்தில் காட்டப்பட்டுள்ளன. அன்னையின் காலருகே இருவர் பக்கத்திற்கொருவராக ஒரு காலை குத்துக்காலிட்டு, மற்றொரு காலை மடித்து அரைமுழந்தாளிட்டு அமர்ந்துள்ளனர். இவர்கள் வீரர்கள். தங்களின் அரசன் அல்லது தலைவன் வெற்றி வேண்டி கொற்றவையை வழிபடுகின்றனர். இரு வீரர்களும் கீழாடையாக அரைகாற் சட்டையும், கழுத்தில் சரப்பளி என்னும் அணியும் அணிந்துள்ளனர். வலப்புறம் அமர்ந்துள்ள வீரனின் தலைக்கோலம் அளகசூடகமாய் அமைந்துள்ளது. தேவியின் இடது புறம் அமர்ந்துள்ளவர் தன் கழுத்தை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிட எத்தனிக்கிறார். தலைப்பலி வீரன் என்று அவ்வீரன் அழைக்கப்படுகிறான். |
653 | : | _ _ |a கொற்றவை, துர்க்கை, மலையடிப்பட்டி, புதுக்கோட்டை, சிவன் குடைவரை, புடைப்புச் சிற்பம், முற்காலப் பாண்டியர் சிற்பங்கள், பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், பாண்டியர் குடைவரைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f கீரனூர் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 10.65417098 |
915 | : | _ _ |a 78.89684021 |
995 | : | _ _ |a TVA_SCL_000477 |
barcode | : | TVA_SCL_000477 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |